வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி

தினமலர்  தினமலர்
வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு மேல் வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அந்த தொகை வருமான வரித் துறையால் திருப்பி அளிக்கப்படும். வரித்தாக்கல் செய்பவர், இதை கோரி பெற்றுக்கொள்ளலாம்.



இது தொடர்பான, ‘ரீபண்ட்’ நிலையை அறிந்து கொள்வதும் எளிதானது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதை சரி செய்த பிறகு, கூடுதலாக வரி செலுத்தப்பட்டிருந்தால், அந்த தொகை தானாக திருப்பி அளிக்கப்பட உரியது. இதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


ஆனால், ரீபண்ட் பெற, வங்கி கணக்கு, பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்படா விட்டால், இது தொடர்பாக வங்கியை அணுகி பான் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருமான வரி ரீபண்ட் நிலையை வருமான வரித்துறையின், ‘இ – பைலிங்’ இணையதளம் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.



அதில் உள்ள, ‘ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ‘பார்ம்ஸ்’ பகுதியில், வருமான வரி ரிட்டர்ன் அம்சத்தை தேர்வு செய்து, அதில் வரித்தாக்கல் ஆண்டை பார்த்தால், ரீபண்ட் தொடர்பான விவரம் இருக்கும்.

மூலக்கதை