ஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 11வது ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூரில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு கழகங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு கழகம் 22 தங்க பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் தகுதியை பெற்றது. பாடி விளையாட்டு சங்கம் கழகம் 16 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி. லதா, பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, மாவட்ட தடகள சங்க செயலாளர் மோகன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.   போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை, பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உமாசங்கர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

.

மூலக்கதை