ராணுவ பயிற்சியின் போது தன்னுடைய ஷூவுக்கு பாலீஷ் போடும் தோனி: சமூக வலைதளங்களில் வைரல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராணுவ பயிற்சியின் போது தன்னுடைய ஷூவுக்கு பாலீஷ் போடும் தோனி: சமூக வலைதளங்களில் வைரல்

காஷ்மீர்: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2 மாதங்கள் ஓய்வு எடுத்துள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாராமிலிட்டரியின் 106வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் தோனி இணைந்துள்ளார்.

வருகிற 15ம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபடுவார். தோனிக்கு 2011ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஆனால், தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறவில்லை.



இந்நிலையில் அவர் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், சக ராணுவ வீரர்களை போல், தனது ஷூவுக்கு பாலீஷ் போடும் புகைபடமும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளதால், தோனி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

.

மூலக்கதை