இன்றிரவு மே.தீவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் தடாலடி மாற்றம்...கேப்டன் விராட் கோஹ்லி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றிரவு மே.தீவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் தடாலடி மாற்றம்...கேப்டன் விராட் கோஹ்லி தகவல்

லாடர்ஹில்: கரீபியன் தீவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி புளோரிடாவின் லாடர்ஹிலில் நடந்தது. இதில் 168 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 15. 3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி கயானாவில் இன்றிரவு 8. 00 மணிக்கு நடக்கிறது.

ஏற்கனவே தொடரை வென்றதால், கடைசி டி-20 போட்டியில் இந்திய அணியின் பெஞ்ச் பலத்தை சோதிக்கவுள்ளதாக கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘இந்திய அணியின் வெற்றிக்கு தான் முதலில் முக்கியத்துவம்; ஆனால் தொடரை வென்றதால் சில இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்திய அணி வெற்றி என்பதில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்காது. அணியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் சகார், தீபக் சகார் என பல வீரர்கள் உள்ளனர்.

இவர்களில் சிறந்த லெவன் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்படும்’’ என்றார்.


.

மூலக்கதை