ரயில் பாதை விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் நெரிசலை குறைப்பதுடன்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரயில் பாதை விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் நெரிசலை குறைப்பதுடன்…

ரயில் பாதை விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் நெரிசலை குறைப்பதுடன் போக்குவரத்தை விரைவானதாக மாற்ற 3 லட்சத்து 92 ஆயிரத்து 320 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இரட்டைப்பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் இத்தொகையில் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பை மேம்படுத்த ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. ரயில் நிலையங்களை மேம்படுத்தவும் சரக்கு கையாளும் முனையங்களை அமைக்கவும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதிவேக ரயில் மற்றும் அதற்கான பாதை அமைக்கும் திட்டங்களுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீருக்கு ரயில் சேவையை மேம்படுத்த 39 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. பயணிகள் வசதி மேம்பாட்டுக்காக 12 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது. இது தவிர மற்ற வகை செலவுகளுக்கு 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை