50 திருவள்ளுவர் சிலைகளை உலகெங்கும் நிறுவிய வி.ஜி.சந்தோசத்திற்குப் பாராட்டு விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
50 திருவள்ளுவர் சிலைகளை உலகெங்கும் நிறுவிய வி.ஜி.சந்தோசத்திற்குப் பாராட்டு விழா

அமெரிக்காவில் ஐம்பதாவது சிலையை நிறுவிட்டு திரும்பிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் 50 திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய வி.ஜி. சந்தோசத்திற்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

வி ஜி பி உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் உலகம் முழுவதும் பரப்பி வரும் சேவை நடந்துவருகிறது. இந்த அமைப்பு பல்வேறு திருக்குறள் மாநாடுகளை நடத்திவருவதுடன் திருவள்ளுவர் கருத்துகளை உலகெங்கும் பரப்பும் பணியை தொடர்ந்து செய்துவருகிறது. இந்தியாவில் கங்கைக்கரை, மும்பை தமிழ்ச்சங்கம், விசாகப்பட்டினம் , தென்னாப்பிரிக்கா, டர்பன், மலேசியா தோட்ட மாளிகை, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் குறிப்பாக 16 வெளிநாடுகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 50வது திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார் . இந்த சிலையை அமைக்க சிகாகோ பகுதி மாவட்ட நிர்வாகமே இடம் ஒதுக்கி பொதுவெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐம்பதாவது சிலை வழங்கிய நிகழ்வை பாராட்டும் வகையில் சென்னை முத்தமிழ் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதை கைத்தடி பதிப்பகம், சர்வதேச மக்கள் உரிமைக் கமிட்டி சார்பாகவும் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.ஜோதிமணி, பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் இல.கணேசன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சொல்லின் செல்வர் பீட்டர் அல்போன்ஸ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, விஜிபி குழும நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், பேராசிரியர் அப்துல்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஏற்புரையாற்றி பேசினார்.

திருக்குறள் சிலை வழங்குவது என்பது நம் மொழியின் மேன்மையை , நம் கலாச்சரத்தை உலகெங்கும் கொண்டுசெல்வது மட்டுமல்லாது, ஒவ்வொரு சிலையும் அதன் இருப்புக்கான ஒரு இடத்தை பெறுகிறது அந்தந்த பகுதியில் பெறுகிறது. பிறகு, அந்த இடம் தமிழர்கள் கூடி தங்கள் மொழி குறித்தும், வளர்ச்சி, தொன்மை குறித்தும் உரையாடும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பதும் கண் கூடாக காணமுடிகிறது.

மூலக்கதை