பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

தினமலர்  தினமலர்
பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்: பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.


ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற வேண்டும். ஏற்கனவே ஒருமுறை, பிரெக்சிட் மசோதா, ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியது.
இரண்டாவது முறையும், இந்த மசோதாவிற்கு பார்லியின் ஒப்புதலை பெற முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, பிரிட்டன் பிரதமர், தெரசா மே அறிவித்தார். இதன்படி, தன் பிரதமர் பதவியை, கடந்த மாதம் (ஜூன்) அவர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பு, நடந்தது. இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 ஓட்டுகளும் கிடைத்தன.

மூலக்கதை