இந்து சாமியார் மீது தாக்குதல் அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்

தினகரன்  தினகரன்
இந்து சாமியார் மீது தாக்குதல் அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்

நியூயார்க்: இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்க எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இந்து சாமியார் சுவாமி ஹாரிஸ் சந்தர் புரி. இவர் மீது கடந்த வியாழனன்று  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  ‘இது எனது நாடு’ என்று கூறி அந்த நபர், சாமியார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 52 வயதான செர்யோ கவுவியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எம்.பி.க்கள் கிரேஸ் மெங் மற்றும் டாம் சுசோசியா ஆகியோர் கூறுகையில், “இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும். நாங்கள் எப்போதும் இந்து சமூகத்தினரின் ஒற்றுமைக்கு ஆதரவாக நிற்போம். குயின்ஸ் நகரமானது உலகின் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வீடாகும். நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா,  கிரேஸ் மெங் மற்றும் டாம் சுசோசியா ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நியூயார்க் கவுன்சில் ஜெனரல் சந்தீப் சக்ரவர்த்தி, பாதிக்கப்பட்ட இந்து சாமியாரை நேற்று முன்தினம் சந்தித்து நலம் விசாரித்தார். உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரையும் அவர் பாராட்டியுள்ளார்.

மூலக்கதை