2.72 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

தினகரன்  தினகரன்
2.72 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

ஜம்மு:  அமர்நாத் பனிலிங்கத்தை நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 1ம் தேதி தொடங்கியது. அனந்த்நாக் மாவட்டத்தின் பகல்காம் மற்றும் பால்தால் வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே 3,178 பேர் கொண்ட 21வது குழு பனிலிங்க தரிசனத்துக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றது. 261 பெண்கள், 4 சிறுவர்கள், 142 சாமியார்கள் உள்ளிட்டோர் அடங்கிய 1634 பேர் பகல்காம் வழியாகவும், 514 பெண்கள், 39 சிறுவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 1,544 பேர் பால்தால் வழியாகவும் யாத்திரை செல்கின்றனர். 128 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் பாக்வதி நகர் மலையடிவார முகாமில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். 46 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை வரும் 15ம் தேதி நிறைவடைகிறது. 2015ம் ஆண்டு 3.53 லட்சம் பேர், 2016ம் ஆண்டு 3.20லட்சம் பேர், 2017ம் ஆண்டு 2.60 லட்சம் பேரும், கடந்த ஆண்டு 2.85லட்சம் பேரும் அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர்.

மூலக்கதை