காங்கிரஸ்-மஜதவைச் சேர்ந்த 12 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்...நாளை 11 மணிக்கு ஆஜராக உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ்மஜதவைச் சேர்ந்த 12 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்...நாளை 11 மணிக்கு ஆஜராக உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள 12 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை புறக்கணித்த புகாரில், நாளை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அவர்கள் 15 பேரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 எம்எல்ஏகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும்கட்சி பெருன்மை பலமிழந்தது.

முதல்வர் பதவி விலககோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி சட்டபேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படி சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தார்.

 அதையேற்றுகொண்ட சபாநாயகர் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார்.

அதன்படி 18ம் தேதி பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார். இடையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, காங்கிரஸ் எம்எல்ஏகள் பத்து பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்படி நம்பி–்க்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.

சித்தராமையா எழுப்பிய சட்ட பிரச்னையால் பேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரண்டாவது நாளான 19ம் தேதி மீண்டும் பேரவை கூடியபோதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்தது. அதே நாளில் வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வி. ஆர். வாலா இரு எழுதிய இரு கடிதத்தையும் கண்டுக்கொள்ளவில்லை.

இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சபாநாயகர் அவையை திங்கட்கிழமை ஒத்தி வைப்பதாகவும், அன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிரடியாக தெரிவித்து அவையை ஒத்தி வைத்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேரவை கூடியது.

 இந்நிலையில் கொறடா உத்தரவு மதிக்காத 12 காங்கிரஸ் எம்எல்ஏககளை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யகோரி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர் சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாரிடம் கொடுத்துள்ள புகாரை பரிசீலனை செய்த சபாநாயகர், சம்மந்தப்பட்ட 12 எம்எல்ஏகளுக்கு சட்டபேரவை செயலாளர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் உங்கள் மீது ஏன் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககூடாது. இது தொடர்பாக 23. 07. 2019 (நாளை) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லையெனில் சட்டபேரவை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை