இந்தியாவுக்கான புதிய சீன தூதர்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கான புதிய சீன தூதர்

புதுடில்லி : இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக்கொள்ள டில்லி வந்துள்ளார்.


சன் வெய் டாங் :


சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய், சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார். இதனையடுத்து தெற்காசியா குறித்த விரிவான அனுபவமும் அறிவும் மிக்கவரான 53 வயதான சன் வெய் டாங் புதிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வலிமையான தலைவர்கள் :


அவர் இந்தியா வரும் முன்னர், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பட பாடுபடுவேன். ஆசியாவின் இருபெரும் சக்திகளான இந்தியாவிலும் சீனாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வலிமையான தலைவர்கள் இருப்பதால் இருநாட்டு உறவுகளும் புதிய உச்சத்தை அடையும்,'' என்றார்.


மோடி - சீஜின்பிங் சந்திப்பு :


இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்டில் சீனப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்க உள்ள நிலையில், இருநாட்டு உறவுகளையும் இணக்கமாக வைத்திருக்க இருநாட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை