பீகார், அசாம் வெள்ளம்... பலி எண்ணிக்கை 166 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார், அசாம் வெள்ளம்... பலி எண்ணிக்கை 166 ஆக உயர்வு

பாட்னா: பீகார், அசாம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பீகாரிலும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். கஜிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

பீகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38 லட்சம் பேரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தர்பங்காவில் உள்ள சில கிராம மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

ரயில் பாதையின் அருகே குடும்பத்தினருடன் திறந்தவெளியில் வசிக்கின்றனர்.
‘அரசு தரப்பில் இருந்து எவ்வித உதவியும் வந்து சேரவில்லை’ என்று பீகாரின் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

.

மூலக்கதை