'ஆறு'.. தவறு! 'அதர்மசேனா' ஒப்புதல்

தினமலர்  தினமலர்
ஆறு.. தவறு! அதர்மசேனா ஒப்புதல்

கொழும்பு: 'பைனலில் 6 ரன் கொடுத்தது தவறு. இது குறித்து வருத்தப்படவில்லை' என, அம்பயர் தர்மசேனா தெரிவித்தார்..


இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை பைனலில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசி., அணி 241 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 'சேஸ்' செய்த போது, கப்தில், கப்தில், 'ஓவர் த்ரோ' செய்த பந்து, ரன் எடுக்க ஓடிய இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. கள அம்பயர் தர்மசேனா (இலங்கை), மொத்தம் 6 ரன்கள் (2 ரன் ஓடியது + பவுண்டரி) வழங்கினார்.


'டிவி ரீப்ளேயில் பார்த்த போது, ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன் ஓடும் முன், பந்தை 'த்ரோ' செய்தது தெரிய வந்தது. இதை அம்பயர் கவனித்திருந்தால், 5 ரன் மட்டுமே கிடைத்திருக்கும். அடுத்த பந்தையும் ஸ்டோக்ஸ் சந்தித்திருக்க மாட்டார். இப்போட்டி, 'டை' ஆனதுடன், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எட்ட, பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து கோப்பை வென்றது.


இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தற்போது தர்மசேனா மவுனம் கலைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: பைனலில் பேட்டில் பட்டு ஒரு ரன் கூடுதலாக தந்ததாக புகார் கூறுகின்றனர். 'டிவி ரீப்ளே'யில் பார்த்தபின், ரசிகர்கள் குறை கூறுவது எளிதானது. ஆனால் மைதானத்தில் எங்களுக்கு இந்த வசதி கிடையாது. தற்போது, 'டிவி'யில் பார்த்தபின் தான், எனது தவறு தெரியவருகிறது. இதை எண்ணி வருத்தப்படவில்லை. எனது தீர்ப்பை ஐசிசி ஏற்றுக் கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை