பளுதூக்கி பயிற்சி செய்த கோஹ்லி; சற்றும் சளைக்காத அனுஷ்கா

தினமலர்  தினமலர்
பளுதூக்கி பயிற்சி செய்த கோஹ்லி; சற்றும் சளைக்காத அனுஷ்கா

மும்பை: கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்காவும் 'ஜிம்'மில் கடின பயிற்சி செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி(30). அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தும் இவர், உடற்பயிற்சி விஷயத்தில் கவனமாக இருப்பார். இவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும்(31), இதே பாணியை பின்பற்றுகிறார்.


சமீபத்தில் இருவரும் 'ஜிம்'மில் பளுதூக்கி உடல் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த 'வீடியோ'வை, கோஹ்லி தனது 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுடன், 'கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்காவும் இதே போல, பளுதூக்கி பயிற்சி செய்தார். இந்த 'வீடியோ'வை, தனியார் 'ஜிம்' மையம், 'இன்ஸ்டாகிராமில்' வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மூலக்கதை