தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள சார்லி

தினமலர்  தினமலர்
தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள சார்லி

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சார்லி. இதில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்னா கோபாலன், நெடுமுடி வேனு உள்பட பலர் நடித்திருந்தார்கள். மார்டின் பர்க்கத் என்பவர் இயக்கி இருந்தார். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிண்டிங் சினிமா தயாரித்திருந்தது.

தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் மாதவன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மாதவனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பார்வதி கேரக்டரில் த்ரிஷா நடிக்கலாம் என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. தற்போது ராக்கெட்டரி படத்தில் பிசியாக இருக்கும் மாதவன் அதை முடித்து விட்டு இதில் நடிக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்று தெரிகிறது.

மூலக்கதை