வெள்ளையானைக்கு இசை அமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்

தினமலர்  தினமலர்
வெள்ளையானைக்கு இசை அமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்

திருடா திருடி, சீடன், யோகி படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா தற்போது இயக்கி உள்ள படம் வெள்ளையானை. இதில் சமுத்திரகனி, ஆத்மிகா, யோகி பாபு, இ.ராம்தாஸ், எஸ்.எஸ்.ஸ்டான்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இது வறட்சி காரணமாக தஞ்சை பகுதியிலிருந்து புலம் பெயர்ந்த விவசாயிகளை பற்றிய கதை. தஞ்சாவூர், சென்னை, பெங்களூரு பகுதியில் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. தற்போது இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். "முழு படத்தையும் பார்த்தேன்.

இன்றைக்கு தேவையான ஒரு படம். விவசாயிகளின் இன்றைய நிலையை கண்கள் கலங்குகிற அளவிற்கு சொல்லியிருக்கிறார். இதற்கு உரிய உணர்வுபூர்வமான இசையை கொடுக்க முயற்சிப்பேன்" என்கிறார் சந்தோஷ் நாராயணன். செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூலக்கதை