சூர்யாவுக்கு வில்லன் ஆகும் பரேஷ் ராவல்

தினமலர்  தினமலர்
சூர்யாவுக்கு வில்லன் ஆகும் பரேஷ் ராவல்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் பரேஷ் ராவல். வில்லன், காமெடியன், குணசித்ர நடிகர் என பல வேடங்களில் நடித்தவர். அதிகமான விருதுகளை பெற்றவர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர். தற்போது அலகாபாத் கிழக்கு தொகுதி எம்.பியாக உள்ளார்.

பரேஷ் ராவல் முதன் முறையாக தமிழில் நடிக்கிறார். சூர்யா நடிக்கும் சூரறை போற்று படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். அபர்னா பாலமுரளி ஹீரோயின். படம் தமிழ், இந்தியில் தயாராகிறது. பரேஷ் ராவல் நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

மூலக்கதை