அவெஞ்சர்ஸ் என்ட் கேம், உலகின் நம்பர் 1 வசூல் படம்

தினமலர்  தினமலர்
அவெஞ்சர்ஸ் என்ட் கேம், உலகின் நம்பர் 1 வசூல் படம்

உலகத் திரையுலகத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருந்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 2.7897 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் இருந்தது.

அந்த வசூலை அவெஞ்சர்ஸ் என்ட்கேம் தற்போது முறியடித்துள்ளது. நேற்றுடன் இந்தப் படம் 2.789 பில்லியுன் யுஎஸ் டாலர் வசூலித்து அவதார் வசூலைக் கடந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை மார்வெல் ஸ்டுடியோஸ் கெவின் பெஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவதார் படத்தின் சாதனையை முறியடிக்க 9 வருடம் ஆகியுள்ளது. இருப்பினும் அவதார் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் என்ட்கேம் சாதனை இரண்டு வருடங்களில் முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2021 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. அப்போது அதன் வசூல் நிச்சயம் புது சாதனை படைக்கலாம்.

மூலக்கதை