'பிகில்' - மூன்று மாதம் முன்பே முதல் சிங்கிள்

தினமலர்  தினமலர்
பிகில்  மூன்று மாதம் முன்பே முதல் சிங்கிள்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார், விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். இப்படத்தில் இடம் பெற்ற 'சிங்கப் பெண்ணே' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் 'லீக்' ஆனது.

பெரும் இசையமைப்பாளரான ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் ஒரு படத்தின் பாடல் இப்படி லீக் ஆனது படக் குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால், வேறு வழியில்லாமல் தற்போது பாடலை அதிகாரப்பூர்வமாக ஜுலை 23ம் தேதி முதல் சிங்கிளாக வெளியிட உள்ளார்கள்.

பொதுவாக பெரிய படங்களின் இசை வெளியீடோ, முதல் பாடல் வெளியீடோ ஒரு மாதம் முன்புதான் நடக்கும். ஆனால், லீக் ஆன காரணத்தால் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பாடலை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இருந்தாலும் விஜய் ரசிகர்களும், ரகுமான் ரசிகர்களும் மகிழ்வுடன் அதிகாரப்பூர்வ பாடலைக் கேட்க ஆர்வமாக இருக்கிறார்கள். லீக் ஆன பாடலுக்கும் வெளிவர உள்ள பாடலுக்கு ஏதாவது வித்தியாசம் இருக்கலாம். இதனால், படத்தின் புது போஸ்டர் ஒன்று விஜய் ரசிகர்களுக்கு கூடுதலாக கிடைத்திருக்கிறது.

மூலக்கதை