அமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
அமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

ஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அனந்த் நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் யாத்திரை நடைபெறுகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வரை, 46 நாட்கள் யாத்திரை நடைபெறுகிறது. அதனால், யாத்திரை செல்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர். இந்தாண்டு யாத்திரை வந்த இடத்தில் உடல்நலக்குறைவு, உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறையால் அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மேலும் 6 பக்தர்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக, பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை