பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

தினமலர்  தினமலர்
பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

தனது பிறந்தநாளை அமெரிக்காவின் மியாமி நகரில் கணவர் நிக்கி ஜோன்ஸ், தாய் மது சோப்ரா, சகோதரி பரினீதி சோப்ரா மற்றும் ஏராளமான தோழிகளுடன் கொண்டாடி உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அங்கு சந்தோஷமாக பொழுதை கழித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பிங்க் நிற பிகினி அணிந்து வாட்டர் ஸ்கூட்டர் பயணம் செய்தது, குடும்பத்துடன் படகில் பயணம் செய்தது. கணவர் நிக்கி ஜோன்சுடன் கவர்ச்சி உடையில் நடந்து செல்வது, கணவருடன் நெருக்கமாக அமர்ந்து எடுத்துக் கொண்டது என்பது உள்ளிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

தொடர்ந்து, சிவப்பு நிற ஜோலிக்கும் உடை அணிந்து, 5 அடுக்கில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி, இந்த ஆண்டு சிறப்பாக தனது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.

மூலக்கதை