அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு

பெய்ஜிங்: சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் அதிகமாக சென்றுவிட்டது, இதனால் ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை அதிகரிக்குமாறு சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை சீனா பொருட்படுத்ததால், சீனாவின பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி சமீபத்தில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி வரையிலான புள்ளிவிவரத்தை  பார்த்தால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது.  தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, சமநிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சீன அதிகாரி தெரிவித்தார்.இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து அமெரிக்காவின் முதல் கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கும் அதிபர் டொனால்டு டிரமப்பின் கொள்கைக்கு எதிராக போராட வேண்டும். இந்த வர்த்தக போரில் இந்தியாவும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று அந்த சீன அதிகாரி தெரிவித்தார். சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் மேல் சென்றதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரையில் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. அதேபோல், முன்னுரிமை வர்த்தக அந்தஸ்து அளிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி உத்தரவிட்டார். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதாவது, 5.6 பில்லியன் டாலர் அளவுக்கு வரி இல்லாமல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு இரு்ந்தது. அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவுடன் சீனா நெருங்கி வருகிறது என்று வர்த்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை