'குண்டக்க மண்டக்க' குப்பை தொட்டி: சாலையின் குறுக்கே வைப்பதால் இடையூறு

தினமலர்  தினமலர்
குண்டக்க மண்டக்க குப்பை தொட்டி: சாலையின் குறுக்கே வைப்பதால் இடையூறு

கோவை:கோவை மாநகரப் பகுதியில், குப்பை கொட்டுவதற்கான 'கன்டெய்னர்' மற்றும் தொட்டிகள், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வைக்கப்படுகின்றன.கோவை நகர் பகுதியில், குறிப்பிட்ட சில பகுதிகளில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில், குப்பை கொட்டுவதற்கு கன்டெய்னர் அல்லது தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதான ரோடுகள் மற்றும் சாலை சந்திப்புகளில் கன்டெய்னர்களும், குறுக்கு வீதிகளில் சிறிய அளவிலான தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. தினமும் காலை, 7:00 மணி முதல் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. குப்பையை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.குப்பையை லாரிக்கு மாற்றி விட்டு, கன்டெய்னர் மற்றும் தொட்டிகளை அதே பகுதியில் வைத்துச் செல்வர். அப்போது, தங்கள் இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு கோணத்தில் தொட்டியை வைக்கின்றனர். சில இடங்களில் ரோட்டிலேயே வைப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக அமைகிறது. பிரதான ரோடுகளில் குறுக்கும், நெடுக்குமாக வைக்கப்படும் தொட்டிகளால், வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. சில தருணங்களில் குப்பையும் நிரம்பி வழிவதால், அவ்விடமே அருவருப்பாக காணப்படுகிறது.இதற்கு தீர்வு காண, குப்பை தொட்டி வைக்கும் இடங்களை உறுதி செய்து, சிறிய அளவில் மேடை அமைத்து, அதன் மீது வைக்க வேண்டும்.
குப்பையை லாரிக்கு மாற்றி விட்டு, மீண்டும் அம்மேடை மீது தொட்டியை வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, குப்பை தொட்டிகள் ஒவ்வொரு பகுதியிலும் சீராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்துக்கும் இடையூறும் ஏற்படாது.சில இடங்களில் ரோட்டிலேயே வைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறாக அமைகிறது. பிரதான ரோடுகளில் குறுக்கும், நெடுக்குமாக வைக்கப்படும் தொட்டிகளால், வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. சில தருணங்களில் குப்பையும் நிரம்பி வழிவதால், அவ்விடமே அருவருப்பாக காணப்படுகிறது.

மூலக்கதை