உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு

புதுடெல்லி: உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், திரிபுரா, நாகாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாய்க்கிற்கு பதிலாக மத்தியபிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேலை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதே போல் மேற்குவங்க ஆளுநராக கேசரிநாத் திரிபாதிக்கு பதில் ஜெக்தீப் தாங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் திரிபுரா ஆளுநராக ரமேஷ் பயஸ் மற்றும் பீகார் ஆளுநராக பாகுசவுகான், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியபிரதேச ஆளுநராக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 6 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றியும், புதிதாக நியமித்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை