பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது

தினமலர்  தினமலர்
பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில், அமலாபால் நடித்துள்ள படம் ஆடை. உயர்ந்த கட்டடம் ஒன்றில் பெண் ஒருவர் ஆடையின்றி மாட்டிக் கொள்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது மாதிரியான கதை. அமலாபால் இன்றைய நவநாகரீக அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளார். டீசர், டிரைலரே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தணிக்கையில் ‛ஏ' சான்று பெற்ற இப்படம் நேற்று வெளியாகவில்லை.

தயாரிப்பாளர் தரப்பில் நிலவிய நிதி பிரச்னையால் திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய தவியாய் தவித்தார் அமலாபால். இதற்காக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் பேசிய அமலாபால், இறுதியில் தனது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை விட்டுக் கொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து படம் நேற்று மாலை சில பகுதிகளில் ரிலீஸானது. இன்று(ஜூலை 20) அனைத்து ஏரியாக்களிலும் வெளியானது.

மூலக்கதை