மணிரத்னத்தின் ‛வானம் கொட்டட்டும்' : சாந்தனு இணைந்தார்

தினமலர்  தினமலர்
மணிரத்னத்தின் ‛வானம் கொட்டட்டும் : சாந்தனு இணைந்தார்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்குகிறார். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஒளிப்பதிவு செய்கிறார்.

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா, அமிதாஷ் பிரதான் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் புதிதாக பாக்யராஜ் மகன் சாந்தனுவும் இணைந்திருக்கிறார். சாந்தனு நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது. இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூலக்கதை