தங்கர்பச்சான் மகன் ஹீரோவானார்

தினமலர்  தினமலர்
தங்கர்பச்சான் மகன் ஹீரோவானார்

40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடியப் பொழுதுகள், அம்மாவின் கைபேசி படங்களை இயக்கியவர். பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் அப்பாசாமி, அம்மாவின் கைபேசி படங்களில் நடித்தவர். தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார்.

மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முனீஸ்காந்த், டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, மற்றும் யோகிராம் ஆகியோர் நடிக்கிறார்கள். தமன்குமார் இசை. பிரபு தயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படம். முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

மூலக்கதை