நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் ‛இக்லு'

தினமலர்  தினமலர்
நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் ‛இக்லு

சிறு முதலீட்டு படங்களை வெளியிட புரமோசன் வேலைகளுக்கும், தியேட்டர் முன்பணத்திற்கும் பெரிய அளவில் பணம் செலவிட வேண்டி உள்ளது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் இணையதள பிளாட்பார்மில் வெளிவருகிறது. அந்த வரிசையில் இக்லு என்ற படம் ஜீ5 நிறுவன தளத்தில் வெளியாகிறது.

இதில் அம்ஜத்கான், அஞ்சு குரியன், மேத்யூ வர்கீஸ், ஜீவா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். பரத் மேனன் இயக்கி உள்ளார். வேட்டைக்காரன்பட்டி சக்திவேல் தயாரித்துள்ளார்.

சிவாவும், ரம்யாவும் அன்பான காதல் தம்பதிகள், இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் ரம்யவாவுக்கு ரத்த புற்று நோயால் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. சிவா எப்படி மனைவியையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளையும் வளர்க்கிறார். அதற்கு அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.

மூலக்கதை