இயக்குனர் சங்க தேர்தல் : அதிகாரியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

தினமலர்  தினமலர்
இயக்குனர் சங்க தேர்தல் : அதிகாரியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 21ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியின்றி தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் அவர் வாபஸ் பெற்றது, தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த எஸ்.பி.ஜனநாதன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து அமீர் அணி விலகியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன.

இந்த நிலைவில் தற்போது தேர்தல் அதிகாரியாக இருக்கும் வழக்கறிஞர் செந்தில்நாதன் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் ஜெகன் என்கிற ஜெகன்நாதன் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தொழிலாளர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தேர்தல் அதிகாரி செந்தில்நாதனை மாற்ற தொழிலாளர் நல ஆணையருக்கு உத்தரவிடக்வோரி ஜெகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

"ஒவ்வொரு சங்க தேர்தலுக்கும் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகுவது வாடிக்கையாகி விட்டது. இது உரிமையியல் சம்பந்தப்பட்டது என்பதால் சிவில் கோர்ட்டில்தான் வழக்கு தொடர வேண்டும்" என்று கூறி ஜெகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூலக்கதை