டிரம்பிற்கு பதிலடி: ஒபாமா மனைவி தடாலடி

தினமலர்  தினமலர்
டிரம்பிற்கு பதிலடி: ஒபாமா மனைவி தடாலடி

வாஷிங்டன் : இன பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சில் ஒபாமா கடும் கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயக பிரிதிநிதிகள் சபையில் ஜூலை 16 அன்று வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்தது. அப்போது 4 கருப்பின எம்.பி.,க்களை குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப், அவர்கள் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தங்களின் பிறப்பிட நாடு எதுவோ அங்கேயே திரும்பிச் செல்லட்டும் என்றார்.
இந்த கருத்தை திரும்பப் பெறும்படி அவையில் கோஷம் எழுப்பப்பட்டது. இதுனால் 10 விநாடிகள் பேச்சை நிறுத்திய டிரம்ப், கோஷம் அடங்கியதும் பேச்சை தொடர்ந்தார்.


இது தொடர்பாக எதிர்ப்பு அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தான் அப்படி பேசவேயில்லை என மறுத்தார். டிரம்ப்பின் இந்த இனவாத பேச்சு குறித்து மிச்சில் ஒபாமா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நமது நாட்டை பிரிவினை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்களா; நாம் இங்கு பிறந்தவர்களாகவோ அல்லது அகதியாக வந்தோமோ அப்படி இருந்தாலும் இது அனைவருக்குமான இடம். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எனது அமெரிக்காவோ அல்லது உங்களின் அமெரிக்காவோ இல்லை. இது நமது அமெரிக்கா என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை