சர்வதேச கடல் பகுதியில் கண்காணித்த ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் பதற்றம்

தினகரன்  தினகரன்
சர்வதேச கடல் பகுதியில் கண்காணித்த ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் பதற்றம்

வாஷிங்டன்: ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.   தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளார். மேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாதும் என்றும், மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவுகிறது.  கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த உத்தரவை டிரம்ப் வாபஸ் பெற்றார்.  இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘யுஎஸ்எஸ் பாக்ஸர்’ என்ற நீரிலும், நிலத்திலும் சென்றும் தாக்கும் தன்மை கொண்ட போரக்கப்பல், ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  அறிவித்துள்ளார். இது தொடர்பாக வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில், ‘அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் பாக்சரை மிரட்டும் வகையில் வந்த ஈரானின் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் அருகேயுள்ள ஹோர்மஸ் கால்வாய் பகுதியில் 914 மீட்டர் தொலைவில் நெருங்கி வந்த அந்த விமானத்தை, எங்கள் கடற்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். சர்வதேச நீர்வழி பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்க கப்பலுக்கு ஈரான் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தது. உலக வர்த்தகம் மற்றும் கப்பலின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விளைவித்ததால் அதை சுட்டு வீழ்த்தினோம்,’’ என்றார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பால், வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.ெபண் எம்பி.க்களை  மீண்டும் சீண்டிய டிரம்ப்:அமெரிக்காவில் வசிக்கும் சோமாலியா நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் எம்பி ஒமர் மற்றும் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட ஜனநாயக கட்சியை சேர்ந்த 3 எம்பி.க்கள் மீது அதிபர் டிரம்ப் சமீபத்தில் இனவெறி கருத்துகளை தெரிவித்தார்.  அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும்படியும் கூறியிருந்தார். இதற்கு, கடும் கண்டனம் எழுந்தது. இது பற்றி நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவை சேர்ந்த ஆண், ெபண் எம்பி.க்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. அவர்கள் அமெரிக்காவை நேசிக்க வேண்டும். இவர்களில் பலரின் வெறுப்பு அறிக்கையை நான் கவனித்து வருகிறேன். அது, நாட்டுக்கு நல்லது அல்ல,’’ என்றார், பெண் எம்பி.க்களை குறிப்பிட்டே, டிரம்ப் இப்படி கூறியுள்ளார். இதனால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏமாற்று வேலை என்கிறது ஈரான்:தனது நாட்டு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளதை ஈரான் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில்,  ‘சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட ஈரானுக்கு சொந்தமான அனைத்து ஆளில்லா விமானங்களும் பத்திரமாக திரும்பி விட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது; அது, ஏமாற்று வேலையும் கூட. அமெரிக்கா கடற்படை கப்பல் எங்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை. தனது நாட்டு ஆளில்லா விமானத்தையே தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளது,’’ என்றனர்.

மூலக்கதை