ஹிந்தி பிசினஸை காலி பண்ணிய மிருகம்

தினமலர்  தினமலர்
ஹிந்தி பிசினஸை காலி பண்ணிய மிருகம்

ஹிந்தியில் ஏகப்பட்ட சாட்டிலைட் சேனல்கள் உள்ளன. அவற்றில் பல பொழுதுபோக்கு சேனல்கள். இந்த சேனல்களில் 24 மணி நேரமும் ஏதாவது ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். இதற்கு நிறைய படங்கள் தேவைப்பட்டதால் தமிழ்ப்படங்களை வாங்கி ஹிந்தியில் டப் செய்து ஒளிபரப்பினார்கள்.

இதன் காரணமாக ஹிந்தி டப்பிங் ரைட்ஸுக்கு மார்க்கெட் உருவானது. குறிப்பாக மிருகங்கள் நடித்த படங்களுக்கும், ஆக்ஷன் படங்களுக்கும் செம வரவேற்பு ஏற்பட்டது. ஆனால் கொரில்லா படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கொரில்லா. தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு சிம்பன்சி குரங்கும் நடித்துள்ளது.

சமீபகாலமாக விலங்குகள் இடம்பெறும் படங்கள் நிறைய உருவாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு படம் மான்ஸ்டர். இந்த படத்தில் ஒரு எலி முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து கொரில்லா வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியவர், ரிலீஸ் நேரத்தில் சில பிரச்னைகளை சந்தித்ததால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இப்படத்தின் சாட்லைட் உரிமையை ஜீ தமிழ் டிவி நிறுவனம் வாங்கியதால் தயாரிப்பாளரால் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

மூலக்கதை