போக்குவரத்தை போலீசை பெருமைப்படுத்தும் ‛பச்சை விளக்கு'

தினமலர்  தினமலர்
போக்குவரத்தை போலீசை பெருமைப்படுத்தும் ‛பச்சை விளக்கு

டி.ஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம், பச்சை விளக்கு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டாக்டர் மாறன். இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், 'அம்மணி' புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, 'போஸ்டர்' நந்தகுமார், உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட நடிகை ரூபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். .

'வேதம் புதிது' பட புகழ் தேவேந்திரன் இசை அமைக்கிறார். பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது:

இந்தப் படம் காதலுடன் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிறந்த எவரும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுவராஸ்யமாக சொல்லும் படம், போக்குவரத்து காவல்துறையின் பெருமை பேசுகிற படமாகவும் உருவாகி உள்ளது. என்றார்.

மூலக்கதை