பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

பாட்னா:  பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. இதை தொடர்ந்து கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பலர் உயிரிழக்கும் சூழல் உருவானது. இதை அடுத்து பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்  நிலைமையானது படிப்படியாக சீராகி வரும் சூழலில் மழை மற்றும் வெள்ளப்பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளக் காடாக மாறிய நிலையில் 12 மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மேலும் அதிக பாதிப்புக்குள்ளான சீதாமாரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியின் 26 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதையடுத்து 125 மோட்டார் படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதை தொடர்ந்து 1119 மையங்களில் உணவு சமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் ஆறுகளில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளதாகவும் இதனால் நிலைமை படிப்படியாக சீராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மழை வெள்ளத்தால் 28 லட்சம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 78 பேர் வெள்ளப்பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூலக்கதை