கிரிக்கெட்டின் கடவுளுக்கு முன்பே இந்திய அணியின் தடுப்பு சுவருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது!

தினகரன்  தினகரன்
கிரிக்கெட்டின் கடவுளுக்கு முன்பே இந்திய அணியின் தடுப்பு சுவருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது!

லண்டன்: கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி \'ஹால் ஆஃப் ஃபேம்\' விருது வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் \'ஹால் ஆஃப் ஃபேம்\' விருதுகளை வழங்கி வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும். அதேபோல பந்துவீச்சாளராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும். மேலும் இந்தப் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிந்து இருக்கவேண்டும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் 6-வது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி (2009), சுனில் காவஸ்கர் (2009), கபில் தேவ் (2009), அனில் கும்ப்ளே (2015), ராகுல் டிராவிட்(2018) ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.சச்சினுக்கு முன்பே ஹால் ஆஃப் ஃபேம் விருது வாங்கிய டிராவிட்ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்தியாவில் இருந்து சச்சின், டிராவிட் இருவருக்கும் கிடைக்கும். ஆனால் இந்த விருது டிராவிட்டுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. சச்சினுக்கு இந்த ஆண்டு தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சச்சினுக்கு முன்பே டிராவிட்டுக்கு கிடைத்தது ஏனென்றால் டிராவிட் 2012-ம் ஆண்டிலும், சச்சின் 2013-ம் ஆண்டிலும் ஓய்வை அறிவித்தனர். இதன் காரணமாகவே சச்சினுக்கு முன்னதாகவே டிராவிட்டுக்கு ஐசிசி \'ஹால் ஆஃப் ஃபேம்\' விருது வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை