நான் சண்டைக்கோழி தான் : வனிதா விஜயகுமார்

தினமலர்  தினமலர்

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், அதன் அனுபவங்களையும், பிக்பாஸ் ரகசியங்களையும், நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவருடன் பேசியதிலிருந்து:

'பிக்பாஸ்' அனுபவம் எப்படி இருந்தது?

நன்றாகவே இருந்தது. வெளியே வந்த பின், தப்பா பேச பெரிதாக ஒன்றும் இல்லை. இதற்கு முன் இரண்டு சீசனிலும், 'வைல்ட் கார்டு' மூலம் உள்ளே செல்ல முடியுமா எனக் கேட்டார்கள். போக முடியவில்லை. இந்த முறை இதையும் செய்து பார்த்து விடலாமே என்று தான், உள்ளே சென்றேன். எவ்வளவோ செய்து விட்டோம்; இதை செய்ய மாட்டோமா!

அந்த நிகழ்ச்சியில், என்ன கற்றுக் கொண்டீர்கள்?

சத்தியமாக ஒன்று சொல்கிறேன். இதில் ஒன்றும் கற்றுக் கொள்ள முடியாது. வெளியுலக அனுபவத்தில் தான், நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். பிக்பாஸில் முட்டைக்கும், டீக்கும் சண்டை போடும் போது முட்டாள்தனமாக தெரிகிறது.

உங்கள் குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது ஏன்?

நான், 18 வயது பெண் இல்லை. மூன்று குழந்தைகளுக்கு தாய். நம் குழந்தைகளிடம் எப்படி நடப்போமோ, அப்படித் தான், அங்கு இருந்தேன். என் அடிப்படை குணம், எந்த இடத்திலும் மாறாது. இளம்பெண் என்றால், நானும் அங்குள்ள சிலரை போல் சுற்றிக் கொண்டிருப்பேன்.

பிக்பாஸ் நிஜமாகவே ரியாலிட்டி ஷோவா?

சத்தியமாக எனக்கு கூட இது தெரியவில்லை. ஜாலியாக நடக்கிற ஒரு நிகழ்ச்சி இது; இதைப் போய், சீரியசாக எடுத்துக் கொண்டு சில விஷயங்கள் நடக்கின்றன. சமூக வலைதளங்களில், மீடியாவில்,'மீம்ஸ்கள் கிரியேட்' செய்கின்றனர். இதெல்லாம் ஓவர்.

உங்களுக்கு சண்டைக்கோழி என பட்டம் கொடுத்துள்ளனரே...

சமூக வலைதளங்களில் என்னை, அப்படி விமர்சிக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் என்னைப் போல் இருந்தால் தான் சமாளித்து வாழ முடியும். அந்தளவு பிரச்னைகள் உலகில் உள்ளன. ஒரு பெண் எழுப்பும் குரலை ஆண்கள் ஒடுக்க நினைக்கின்றனர்.

போலீசார் உங்களிடம் விசாரணை நடத்தியது குறித்து...

என் பிள்ளைகளை, என்னிடமிருந்து பிரிக்க ஒரு கூட்டமே இருக்கிறது. என் கடைசி பெண்ணை, என்னிடமிருந்து பிரிக்க, போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் அனைத்தையும் எடுத்து கூறி, அனுப்பி வைத்தேன்.

பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் குறித்து?

அபிராமி கொஞ்சம், 'கேம்' ஆடுகிறா. மதுமிதா, தமிழ் பொண்ணு என்ற இமேஜை பரப்புகிறார். மீதமுள்ளவர்கள் அவரவர் வேலையை பார்க்கின்றனர். ஆனால், இதை மக்கள் ரொம்ப சீரியசாக பார்க்கின்றனர். ரேஷ்மா, நியாயமாக இருக்கிறார். சேரன், முதல் வாரம் பாதுகாப்பான, 'கேம்' ஆடுனார். இப்போது பரவாயில்லை. மீரா, காமெடி பீஸ். லாஸ்லியா, நம் முன் எதையும் பேசமாட்டார். ஆனால் கேமரா முன் நிறைய பேசுகிறார். அவர் வெற்றியாளராகலாம்.

வெளியே வந்த பின் என்ன நடக்கிறது?

என் மகள் படிக்கும் பள்ளியில், எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டனர். ஒரு டீச்சரை பிடிக்கவில்லையாம். உன் அம்மாவை அழைத்து வந்து பேசவை என, சில மாணவர்கள், என் மகளிடம் கூறியுள்ளனர். சினிமாவில் நடித்தால் கூட, இந்தளவு பேசப்பட்டிருக்க மாட்டேன்.

உங்களின் அடுத்த திட்டம்?

டாடி என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறேன். 'சைக்காலஜி த்ரில்லர்' படம். அதன் வேலைகள் பாதியில் நின்று விட்டன. தற்போது, மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மூலக்கதை