‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம்

தினமலர்  தினமலர்
‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம்

சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் பே’ நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

ரேஸர் பே என்ற ஒருங்­கி­ணைந்த பணப் பட்­டு­வாடா தீர்வு நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: நடப்பு நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில் நடை­பெற்ற பணப் பரி­வர்த்­த­னை­களில், தமி­ழ­கம் நான்­கா­வது இடத்­தில் உள்­ளது. முதல் இடத்­தில் கர்­நா­டகா உள்­ளது. இரண்டு மற்­றும் மூன்­றில், முறையே, மஹா­ராஷ்­டிரா, டில்­லி­யும்; ஐந்­தா­வது இடத்­தில், ஆந்­தி­ரா­வும் உள்ளன.

நக­ரங்­களில் நடை­பெற்ற பணப் பரி­வர்த்­த­னை­யில், சென்னை ஆறா­வது இடத்­தில் உள்­ளது. தற்­போது, டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான சேவை கட்­ட­ணம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னால், மொபைல் போன் வாயி­லாக செய்­யும் பரி­வர்த்­தனை, 2021ல், 10 மடங்கு அதி­க­ரிக்­கும். இவ்­வாறு, அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை