கடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்

தினகரன்  தினகரன்
கடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்

புதுடெல்லி:  வழக்கமாக கோடை விடுமுறையில் சரக்கு வியாபாரம் எப்போதும் களை கட்டும். அதிலும் பீர் விற்பனை கன ஜோராக நடக்கும் ஆனால் இந்தியாவில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பீர் விற்பனை  டல் அடித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்த பீர் விற்பனை கடந்த காலாண்டில் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.  இதுபோல் பிற மதுபான வகைகள் விற்பனை 2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது  கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3 சதவீதம் உயர்ந்திருந்தது என லண்டனை சேர்ந்த நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது போது மதுவிற்பனைக்கு கெடுபிடிகள் இருந்ததால் சரக்கு விற்பனை  பாதித்துள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை