2019 டிஎன்பில் சீசன்-4 திருவிழா இன்று திண்டுக்கல்லில் தொடங்குகிறது

தினகரன்  தினகரன்
2019 டிஎன்பில் சீசன்4 திருவிழா இன்று திண்டுக்கல்லில் தொடங்குகிறது

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட்   தொடரின் 4வது சீசன் திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் இன்று தொடங்குிறது. ஐபிஎல் போன்று  தமிழக அளிவில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2016ம் ஆண்டு முதல் நடை பெறுகிறது. இதில் 8 அணிகள் விளையாடுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன தலா ஒருமுறை விளையாடும். ஐபிஎல் போலவே  லீக் சுற்று முடிவில் ஒரு வெளியேறும் சுற்று,  2 தகுதிச் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.  இப்போது 4வது சீசனுக்கான போட்டி திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் இன்று இரவு தொடங்குகிறது.  முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகின்றது. நடப்பு சாம்பியனான சீக்கேம் மதுரை பாந்தர்ஸ் நாளை டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.முதல் 3  சீசன்களிலும்  திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய 3 இடங்களிலும்  லீக் போட்டிகள் சமமான எண்ணிக்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போது திண்டுக்கல், திருநெல்வேலியில் அதிக எண்ணிக்கையில் போட்டிகள் நடக்கின்றன. இந்த சீசனில் ஒரே ஒரு லீக் போட்டி மட்டும் ஆக.4ம் தேதி சென்னையில்  நடக்கிறது.  முதல் தகுதிச்சுற்று பேட்டி  ஆக.11ம் தேதியும், 2வது தகுதிச்சுறறுப் போட்டி ஆக 13ம் தேதியும் திண்டுக்கல்லில் நடைபெறும். இறுதிப் போட்டி ஆக.15ம்தேதி  சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும்.இந்திய அணி வீரர்கள்:டிஎன்பிஎல் தொடரில்  இந்திய அணிக்காக விளையாடும்  அஸ்வின் ரவிசந்திரன்(திண்டுக்கல்), முரளி விஜய் (திருச்சி),  தினேஷ் கார்த்திக் (காரைக்குடி), வாஷிங்டன் சுந்தர்(தூத்துக்குடி), விஜய் சங்கர்(சேப்பாக்கம்) ஆகியோர் டிஎன்பிஎல் தொடரிலும் விளையாடுகின்றனர். அதிலும் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் டிஎன்பிஎல் மூலம் இந்திய தேர்வுக் குழுவின் கவனம் ஈர்த்தவர்கள்.இவர்கள் சந்தேகம்:டிஎன்பிஎல் தொடரில் இந்தியா அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்கள் அஸ்வின் ரவிசந்திரன், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் விளையாட உள்ளனர். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம். காரணம் அஸ்வின் இப்போது இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ள இந்திய-ஏ அணி இப்போது  வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. அதேபோல் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் விளையாட உள்ளனர். அதனால் டிஎன்பிஎல் தொடரில் ஓரிரு போட்டிகளில் மட்டும் இவர்கள் விளையாடலாம்.கோடிகளை கொட்டிய ஐபிஎல்:டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமான  முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், விஜய் சங்கர், வருண் சங்கரவர்த்தி  ஐபிஎல் தொடரில் கவனிக்க தக்க வீரர்களாக வலம் வந்தனர். அதிலும் இந்த ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு  பஞ்சாப் அணி ஏலம்  எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல்  2017ம் ஆண்ட நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் தேர்வானார்.முதல் வெற்றி 3வது சீசனில்...டிஎன்பிஎல் தொடரில் முதல் 2 சீசன்களில் மதுரை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை கூட பெறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடைப்பெற்ற 3வது சீசனில் தான் தனது முதல் வெற்றியை பெற்றது.ஒரு கோடி பரிசு:டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 60 லட்ச ரூபாயும் ரொக்க பரிசாக வழங்கப்படுகின்றன.

மூலக்கதை