இங்கிலாந்து பயிற்சியாளர் இனி சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து பயிற்சியாளர் இனி சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்

மும்பை: உலக கோப்பை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்(56).  ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு முதல்  இங்கிலாந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக டாம்மூடி இருந்தார். இது குறித்து சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட நேற்று அறிவிப்பில்,  ‘மிகவம் கவனத்துடன் பரிசீலனை செய்து டாம் மூடிக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்தோம். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் பலமுறை வெற்றிகரமான பயிற்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் சன்ரைசர்ஸ் அணியை முன்னோற்ற பாதையில்  கொண்டு செல்வார். அதே நேரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஃப்ளே ஆப் சுற்றுக்கும், 2016ம் ஆண்டு கோப்பையை வெல்ல காரணமாக இருந்த  எங்கள் பயிற்சியாளர் டாம் மூடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறாம்’ என்று தெரிவித்துள்ளது.டிரெவர் ஏற்கனவே  2012 முதல் 2014ம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போது கொல்கத்தா அணி 2012, 2014 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பறறியது. அதற்கு முன்னதாக 2007 முதல் 2011ம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக டிரெவர் பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் 2011ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கை இறுதிப் போட்டி வரை முன்னேறியது.  முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, ‘ சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் பணியாற்றியது நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதன் மூலம்  நல்ல நட்புகளும், நினைவுகளும் கிடைத்தன. வெற்றி களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு  கிடைத்த வாய்ப்பாகும்.  அணியின் வீரர்கள், ஊழியர்கள், ரசிகர்களுக்கும் நன்றியை ெதரிவித்துக் கொள்கிறேன்.

மூலக்கதை