வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்; ஆசிய மேம்பாட்டு வங்கி தகவல்

தினமலர்  தினமலர்
வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்; ஆசிய மேம்பாட்டு வங்கி தகவல்

புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக இருக்­கும்’ என, ஆசிய மேம்­பாட்டு வங்கி, முந்­தைய கணிப்­பி­லி­ருந்து குறைத்து, அறி­வித்­துள்­ளது.

இது குறித்து, ஆசிய மேம்­பாட்டு வங்­கி­யின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக இருக்­கும். அடுத்த நிதி­யாண்­டில், இது, 7.2 சத­வீ­த­மாக இருக்­கும். இருப்­பி­னும் இது, ஏப்­ர­லில் கணிக்­கப்­பட்­டதை விட குறை­வா­கும். கடந்த நிதி­யாண்­டில், வளர்ச்சி சரிந்­தது, இதற்கு முக்­கிய கார­ணம். இவ்­வாறு, அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லி­லும், இவ்­வங்கி, தன் கணிப்பை குறைத்தே அறி­வித்­தது. இந்­தி­யா­வின் வளர்ச்சி குறித்து, ஏப்­ரல் மாதத்­தில் அறி­வித்த­ போது, அதன் முந்­தைய கணிப்­பான, 7.6 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 7.2 சத­வீ­த­மா­கக் குறைத்து, அறி­வித்­தது. இப்­போது, 7 சத­வீ­த­மாக இருக்­கும் என, அறி­வித்­துள்­ளது.

மூலக்கதை