‘கோல் இந்தியா’ மூலம் நிதி திரட்ட முயற்சி

தினமலர்  தினமலர்
‘கோல் இந்தியா’ மூலம் நிதி திரட்ட முயற்சி

புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ஈட்­டும் துணை நிறு­வ­னங்­களை, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டு­வ­தற்­கான முயற்­சி­யில் இறங்கி உள்­ளது.

இது குறித்து, உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: முத­லீடு மற்­றும் பொது சொத்து மேலாண்மை துறை, கோல் இந்­தி­யா­வின், துணை நிறு­வ­னங்­களை பட்­டி­ய­லி­டு­வ­தற்­கான திட்­டத்தை ஆராய்ந்து வரு­கிறது. இது தொடர்­பான பேச்சு, ஆரம்ப கட்­டத்­தில் உள்­ளது. ஏற்­க­னவே, நிடி ஆயோக், கோல் இந்­தியா நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னங்­களை, தனித் தனி நிறு­வ­னங்­க­ளாக மாற்­று­வ­தன் மூலம், அவற்றை வளர்ச்­சி­ய­டை­யச் செய்­ய­லாம் என, தெரி­வித்­தி­ருந்­தது. இவ்­வாறு, அவர் கூறி­னார்.

தற்போது, கோல் இந்­தி­யா­வி­டம், ‘ஈஸ்­டர்ன் கோல்­பீல்ட்ஸ், பாரத் கோக்­கிங் கோல், சென்ட்­ரல் கோல்­பீல்ட்ஸ், வெஸ்­டர்ன் கோல்­பீல்ட்ஸ், சவுத் கோல்­பீல்ட்ஸ், நார்த்­தன் கோல்­பீல்ட்ஸ் மகா­நதி கோல்­பீல்ட்ஸ்’ என, மொத்­தம், ஏழு துணை நிறு­வ­னங்­கள் உள்ளன.

மூலக்கதை