‘இ – வே’ பில் பதிவில் தமிழகம் 5ம் இடம்

தினமலர்  தினமலர்
‘இ – வே’ பில் பதிவில் தமிழகம் 5ம் இடம்

ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், தமி­ழ­கம், ஐந்­தாம் இடத்­தில் உள்­ள­தாக, வணிக வரி அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ், மாநி­லங்­க­ளுக்­கி­டையே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ வாயி­லாக அனு­மதி பெறும், இ – வே பில், கடந்த ஆண்டு, ஏப்., 1ல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. மாநி­லத்­துக்கு உள்ளே, 1 லட்­சம் ரூபாய்க்கு அதிக மதிப்­பி­லான சரக்­கு­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான, இ – வே பில், கடந்த ஆண்டு ஜூனில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. தற்­போது, இ – வே பில் பெறும் முறை­யில், தமி­ழ­கம் ஐந்­தாம் இடத்­தில் உள்­ளது.

இது குறித்து, வணிக வரி அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: தமி­ழ­கத்­தில், இது­வரை, ஏழு கோடி, இ – வே பில்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன. நாடு முழு­வ­தும், 78 கோடி பில்­கள் பதி­வாகி உள்ளன. இதில், மஹா­ராஷ்­டிரா மாநி­லம், முதல் இடத்­தில் உள்­ளது. தொடர்ந்து, குஜ­ராத், கர்­நா­டகா, ஹரி­யானா ஆகி­யவை உள்ளன. 78 கோடி பில்­லில், மாநி­லங்­க­ளுக்கு உள்ளே, 42 கோடி, இ – வே பில்­கள் பெறப்­பட்­டுள்ளன.

தமி­ழ­கத்­தில், நான்கு கோடி பில்­கள் மாநி­லங்­க­ளுக்­குள்­ளும், மூன்று கோடி பில்­கள், மாநி­லங்­க­ளுக்­கி­டை­யே­யும் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன. மாநி­லங்­க­ளுக்கு உள்ளே பெறக் கூடிய, இ – வே பில்­லில். தமி­ழ­கம், நான்­காம் இடத்­தில் உள்­ளது. இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை