‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை

தினமலர்  தினமலர்
‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை

புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக மாறி­யுள்­ளன,’’ என, நிதி மற்­றும் கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், அனு­ராக் சிங் தாகூர் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது: ‘பிர­தான் மந்­திரி முத்ரா யோஜனா’ திட்­டத்­தின் கீழ், வங்­கி­யி­லி­ருந்து வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீ­தம் மட்­டுமே, வாராக் கட­னாக மாறி­யுள்­ளது. சில கார­ணங்­க­ளால், கட­னு­தவி பெற்­ற­வர்­கள், கடனை திருப்­பிச் செலுத்­தா­மல் விட்­டு­விட்­ட­னர். குறிப்­பாக, ‘சிசு’ பிரி­வில், முதல் முறை­யாக கடன் பெற்­ற­வர்­கள், அவ­சர தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை தந்­த­தன் கார­ண­மாக, அவர்­க­ளால் கடனை அடைக்க முடி­யா­மல் போயுள்­ளது.

அதே­போல், வியா­பா­ரத்­தில் நஷ்­டம் ஏற்­பட்­டது, கடன் விவ­கா­ரங்­களில் போதிய அனு­ப­வங்­கள் இல்­லா­தது போன்ற கார­ணங்­க­ளா­லும், சிலர் கடனை அடைக்­க­வில்லை. இத­னால், இது­நாள் வரை வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீ­தம் வாராக் கட­னாக மாறி­யுள்­ளது. இவ்­வாறு, அவர் கூறி­னார்.

பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் முதன்மை திட்­டங்­களில் ஒன்று, ‘பிர­தான் மந்­திரி முத்ரா யோஜனா’ திட்­டம். இத்­திட்­ட­மா­னது குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்தை, பிர­த­மர் மோடி, 2015 ஏப்., 8ம் தேதி துவக்கி வைத்­தார். இத்­திட்­டத்­தின் மூலம், 10 லட்­சம் ரூபாய்க்கு குறை­வான கடன் தேவைப்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு, கடன் வழங்­கப்­ப­டு­கிறது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, இத்­திட்­டம் வெற்­றி­க­ர­மாக அதன் இலக்கை நிறை­வேற்றி வரு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், இதன் இலக்கு, 3 லட்­சம் கோடி ரூபாய் என, அர­சால் நிர்­ண­யிக்­கப் பட்­டது.

இந்­நி­லை­யில், கடந்த நிதி­யாண்­டில், இலக்கை தாண்டி, 3.21 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு, கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முந்­தைய நிதி­யாண்­டான, 2017- – 18ல், நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை விட, கடந்த நிதி­யாண்­டில், 23 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­மாக கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த நிதி­யாண்­டில், சரா­ச­ரி­யாக, வேலை நாள் ஒன்­றுக்கு, 970 கோடி ரூபாய் என்ற அள­வில் கடன் கொடுப்­ப­தற்கு, அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்­ளது.

முத்ரா திட்­டத்­தின் கீழ், 2018 மார்ச் மாத முடி­வில், வாராக்­க­ட­னாக, 7,277 கோடி ரூபாய் இருப்­ப­தாக பார்­லி­மென்­டில் அறி­விக்­கப்­பட்­டது. முத்ரா திட்­டத்­தின் கீழ், மூன்று வகை­களில், கடன் வழங்­கப்­ப­டு­கிறது. சிசு திட்­டத்­தில், 50 ஆயி­ரம் ரூபாய் வரை; கிஷோர் திட்­டத்­தில், 50 ஆயி­ரம் முதல், 5 லட்­சம் ரூபாய் வரை; தருண் திட்­டத்­தில், 5 லட்­சம் முதல், 10 லட்­சம் ரூபாய் வரை, கடன் வழங்­கப்­ப­டு­கிறது. வங்­கி­களின் மூலம் இக்­க­டன்­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.

முத்ரா வாராக் கடன் ரூபாய் கோடி­களில்மொத்த வாராக் கடன் 17,651.74எஸ்.பி.ஐ., 2,694.22ஜனா ஸ்மால் பேங்க் 2,193.43பஞ்­சாப் நேஷ­னல் பேங்க் 1,605.13பேங்க் ஆப் இந்­தியா 965.77கனரா பேங்க் 921.46

மூலக்கதை