S-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு

தினகரன்  தினகரன்
S400 பெற்றதால் F35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன்: F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டின் வான் பரப்பு அமைந்துள்ள அங்காரா பகுதியை பாதுகாக்கும் வகையில், அந்நாடு ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை பெற்றுள்ளது. அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வரவழைத்தது.  இதனைத்தொடர்ந்து, துருக்கி நாட்டிற்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யபோவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்தது.அமெரிக்காவின் இந்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்கா F-35 போர் விமானங்களை, தங்களுக்கு விற்பனை செய்யாதது, இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என கூறியுள்ளது. அமெரிக்கா தனது தவறை திருத்திக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.

மூலக்கதை