டெல்லியில் வாகனங்களுக்கான பிஎஸ் 6 விதிமுறை அமல்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

தினகரன்  தினகரன்
டெல்லியில் வாகனங்களுக்கான பிஎஸ் 6 விதிமுறை அமல்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் வாகனங்களுக்கான பிஎஸ் 6 விதிமுறை அமல்படுத்தபட்டுள்ளதாக மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர்  பிஎஸ் 6 விதிகளுக்கு உட்பட்டு தரம் உயர்த்தப்பட்ட எரிபொருள் விற்பனை டெல்லியில் நடைபெற்று வருகிறது என்றார். இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் டெல்லியில் பிஎஸ் 6 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர் புறநகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளால் நகருக்குள் லாரிகள் வருவது குறைந்துள்ளது என்றார். இதை அடுத்து இப்போதே 60 ஆயிரம் லாரிகள் டெல்லிக்குள் வருவதில்லை என்று அவர் தெரிவித்தார். இதனிடையே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே பிஎஸ் 6 விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர். இதில் மாருதி நிறுவனம் பெலினோ, ஸ்விப்ட், ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய கார் நிறுவனங்கள் இன்ஜின்களை பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தி தயாரித்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு முதல் டீசல் வாகனங்களை விற்பதில்லை என்றும் மாருதி முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளையும் 125 cc மெட்ரோ ஸ்கூட்டரையும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தியுள்ளது. இதனிடையே பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப கார்களை தயாரிப்பதால் 10 சதவிகித அளவிற்கு விலை உயரும் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. இதே நேரத்தில் பிஎஸ் 6 வாகனங்களுக்கான எரிபொருளை பிஎஸ் 4 ரக இன்ஜின் கொண்ட வாகனங்களில் பயன்படுத்தினால் அவை மிக தெளிவாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை