100 நாட்களில் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

தினகரன்  தினகரன்
100 நாட்களில் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பிரதமரின் அடுத்த பெரிய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து அடுத்த நூறு நாட்களில் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த பிரதமர் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு உதவிடும் வகையில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் திட்டம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இதுவரை அந்த திட்டத்தின் மூலம் 7 கோடியே 20 லட்சம் பேர் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றுக்கு 1600 ரூபாயை மானியமாக சம்பந்தப்பட்ட எரிவாயு விநியோகஸ்தருக்கு அரசு வழங்கி விடும். மேலும் இதை தொடர்ந்து எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றிக்கு 1600 ரூபாயை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரே பயனாளிக்கு கடன் வசதியில் வழங்க வேண்டும். மேலும் இந்த கடனை மறு முறை எரிவாயு சிலிண்டர் வழங்கும் போது அளிக்கப்படும் மானியத் தொகையில் கழித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை அடுத்த நூறு நாட்களில் 8 கோடியாக அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் 2019ம் ஆண்டு இறுதிக்குள் 100 சதவிகித ஏழை பெண்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை