குல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்

தினமலர்  தினமலர்
குல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: குல்பூஷண் ஜாதவை விடுவிக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனக்கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்.
உளவு பார்த்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைக்கு சதி செய்ததாகவும் நமது கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாக். ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தண்டனையை மறுஆய்வு செய்யும்படி பாக்.குக்கு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: குல்பூஷண் ஜாதவை , சர்வதேச நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கவில்லை. சிறையிலிருந்து விடுவிக்கவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிடவில்லை. இது பாராட்டுக்குரியது. குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்ற செயல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் சட்ட ரீதியாக எடுக்கும் எனக்கூறியுள்ளார்.




மூலக்கதை