இந்திய அணியின் எதிர்கால நலனை கருதி மூத்த வீரர்களை நீக்க ஏன் யோசிக்கிறீங்க?...தோனியை மறைமுகமாக சாடிய சேவாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியின் எதிர்கால நலனை கருதி மூத்த வீரர்களை நீக்க ஏன் யோசிக்கிறீங்க?...தோனியை மறைமுகமாக சாடிய சேவாக்

புதுடெல்லி: இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து முக்கிய பட்டங்களையும் அப்போதைய கேப்டன் தோனி தலைமையில் வென்றது. டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.

38 வயதான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது ஆட்டம் நடந்து முடிந்த போட்டியில் சோபிக்கவில்லை என்று புகாரும் உள்ளது.

முன்னாள் வீரர்கள் சிலர் தோனிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தோனி அதுகுறித்து எதுவும் மனம் திறக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சியில் கூறியதாவது: நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை.

முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும். 2007ம் ஆண்டுக்கு பின்பு அப்படி நடக்கவில்லை.

ஆனால் இப்போது மூத்த வீரர்களை (தோனியை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அணியும், தேர்வு கமிட்டியும் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா? என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை