இங்கிலாந்தின் கிரிக்கெட் கதாநாயகன் பென் ஸ்டோக்சுக்கு நைட்ஹூட் விருது: புதிதாக தேர்வாகும் பிரதமர் வழங்குவார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்தின் கிரிக்கெட் கதாநாயகன் பென் ஸ்டோக்சுக்கு நைட்ஹூட் விருது: புதிதாக தேர்வாகும் பிரதமர் வழங்குவார்

லண்டன்: லண்ட்ன லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பை வென்றது. இந்த அணியை வெற்றிபாதைக்கு கொண்டு சென்ற அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

போட்டியின் இறுதி ஓவரிலும், அதை தொடர்ந்து வந்த சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் பிரமாதமாக விளையாடி ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களின் கதாநாயகனாக மாறிஉள்ளார்.

இவரை பெருமைப்படுத்தும் விதமாக இங்கிலாந்து நாட்டின் உயரிய ‘நைட் ஹூட்’ விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ‘நைட் ஹூட்’ விருதினை இங்கிலாந்தின் அரசர்கள் அல்லது ராணி வழங்குவார்கள். இதற்கு முன் 11 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

கடைசியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலிஸ்டர் குக் இவ்விருதை பெற்றிந்தார். இந்த விருதை பெற்றவர்கள் மிஸ்டர் என்பதற்கு பதிலாக ‘சர்’ என எழுதுவார்கள்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இந்த மாத இறுதியில் விடைபெறும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களான போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரேமி ஹன்ட் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய விவாதத்தில், ‘பென் ஸ்டோக்சுக்கு ‘நைட் ஹூட்’ விருது வழங்கப்படும்’ என்று கூறியுள்ளனர்.

.

மூலக்கதை